கடையநல்லுரை அடுத்த புதுக்குடி மாதாங்கோயில் தெருவை சேர்ந்த மாரியம்மாள், லெட்சுமி, பத்திரகாளி உள்ளிட்ட பல பெண்கள் தேவர் இன இளம்புலிகள் ஒருங்கிணைப்பாளர் ராஜாமறவன் தலைமையில் நேற்று கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு கொடுத்தனர்.
மனுவில் தாங்கள் வசிக்கும் அதே புதுக்குடியை சேர்ந்த சிலர் வங்கியில் 1 லட்சம் ரூபாய் கடன் பெற்று தருவதாக கூறி 9 பேரிடம் தலா ரூ.15 ஆயிரம் வீதம் வரை பணம் பெற்றுக்கொண்டனர். ஆனால் வங்கி கடனும் வாங்கி தரவில்லை. கொடுத்த பணத்தையும் திருப்பி தரவில்லை. இதுகுறித்து கேட்ட போது சம்பந்தப்பட்டவர்கள் தங்களை மிரட்டுவதாகவும், மேலும் தங்கள் மீது போலீசில் புகார் கொடுத்து வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதனால் நாங்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளும் முயற்சியில் இருக்கிறோம். எனவே கோட்டாட்சியர் தலை யிட்டு சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் எங்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.
ஆர்டிஓவிடம் பெண்கள் மனு
Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Post a Comment