இந்நிலையில் தற்போது கடையநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர மாக நெல் அறுவடை நடந்து வருவதால் ஏராளமாக லாரி களில் கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுகிறது. கேரளா வியாபாரிகள் அதிக விலை கொடுத்து வைக்கோலை வாங்குவதால் தமிழக விவசாயிகள் தங்கள் தேவைகளையும் கருத்தில் கொள்ளாமல் வைகோலை விற்று வருகின்றனர். கேரளாவிற்கு வைக்கோல் கொண்டு செல்ல தடை விதிக்க வேண்டும் என அவ்வப் போது கோரிக்கை வைக்கப்பட்டாலும் அதனை கேரளாவிற்கு வைக்கோல் கொண்டு செல்லப்படுவது அதிகரித்து வருகிறது.
ரோட்டை அடைத்து கொண்டு தினந்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகளில் வைக்கோல் கொண்டு செல்லப்படுவதால் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்படுகிறது. இதனால் பொதுமக் கள் கடும் பாதிக்கப்படுகின்ற னர். மேலும் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. போலீஸ் உட்பட பல்வேறு துறை அதிகாரிகளுக்கு இதனை கண்டு கொள்வதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே பொதுமக்கள் நலன்கருதி அளவிற்கு அதிக மாக பாரம் ஏற்றி கேரளாவிற்கு செல்லும் லாரிகளை கட்டுப்படுத்த வேண்டும் குறைந்த பட்சம் பகல் நேரத் தில் மட்டுமாவது வைக்கோல் லாரி செல்லுவதற்கு தடைவிதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Post a Comment