தாயே அவனை மன்னித்துவிடு

உன்மேல் வைத்திருந்த பாசத்தில் கொஞ்சம் எடுத்து
அவள்மேல் வைத்துவிட்டான் உனக்கு தெரியாமலே
தாயே அவனை மன்னித்துவிடு..

மகன் நடக்க வேண்டாம் என்றுசொல்லி
நீயே கடைக்கு செல்வாய் -ஆனால் அவனோ
அவள் பின்னால் நடந்து நடந்தே அவன் காலை புண்ணாக்கி கொண்டான்
 உனக்கு தெரியாமலே
தாயே அவனை மன்னித்துவிடு

அவன் உடம்பில் கொஞ்சம் காயம் பட்டாலே
 நீ தாங்கமாட்டாய் ,இரவு தூங்க மாட்டாய்
ஆனால் அவனோ
அவளை நினைத்து நினைத்து
அவன் உள்ளதையே காயப்படுத்தி விட்டான்
உனக்கு தெரியாமலே
தாயே அவனை மன்னித்துவீடு


 உன் மெல்லியெ மேனி காயப்பட்டாலும் கூட காயமின்றி பெற்றெடுத்து அவனை பார்த்து சிரித்தாய்-ஆனால் அவனோ
அவன் சின்ன இதயத்தை சின்னாபின்னாமாக்கும் அவளை நினைத்து அழுது கொண்டே பிறந்தான் உனக்கு கூட தெரியாமலே
தாயே அவனை மன்னித்துவிடு

காதல் காதல் என்று சுற்றி திரிகிறான் கருவிலிருக்கும் பொழுதிலிருந்தே அவனை காதலித்து கொண்டிருக்கும் உன்னை மறந்து
உனக்கு தெரியாமலே..

தாயே அவனை மன்னித்துவிடு



உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment