கடையநல்லூர் யூனியன் பொய்கையில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 லட்சம் செலவில் கட்டப்பட்ட 2 புதிய வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் கருணாகரன் தலைமை தாங்கினார். முத்துக்கருப்பன் எம்.பி. முன்னிலை வகித்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயகண்ணு வரவேற்று பேசினார். விழாவில் அமைச்சர் செந்தூர் பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, புதிய வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்தார். தொகுதி செயலாளர் பொய்கை மாரியப்பன், ஒன்றிய செயலாளர் வசந்தம் முத்துப்பாண்டி, நகர செயலாளர் கிட்டுராஜா, யூனியன் தலைவி பானுமதி, துணை தலைவர் பெரியதுரை, உள்பட பலர் கலந்துகொண்டனர்.Tweet
Post a Comment