சீனாவின் சாங்ஷா பகுதியைச் சேர்ந்தவர் ஸியோ வெய்.  தொழிற்சாலையில் வேலை செய்துகொண்டிருந்தபோது அவரது வலது கை துண்டிக்கப்பட்டு விட்டது. ஆனால், அந்த துண்டிக்கப்பட்ட கையை சரியாக அதே இடத்தில் மருத்துவர்களால் பொருத்தமுடியவில்லை. 

இதையடுத்து இருதயத்தில் இருந்து ரத்தத்தை எடுத்து செல்லும் கால் பகுதி தமனி நரம்பில் இணைத்து கணுக்கால் பகுதியில் அந்த கையை மருத்துவர்கள் தைத்துவிட்டனர். பின்னர் தமனியில் ஒடும் ரத்தம் கைப்பகுதிக்கு பாய்ந்து தற்போது கை உயிர் ஓட்டம் பெற்றுள்ளது. 

ஒரு மாதம் கழித்த பிறகு, மீண்டும் அந்த கையானது 15 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பிறகு அவரது வலது கையுடன் இணைக்கப்படவுள்ளது. இதையடுத்து அந்த கை மீண்டும் செயல்படும் என்று மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

பொதுவாக இதுபோன்று துண்டிக்கப்பட்ட பகுதிகளுக்கு அக்குள் மற்றும் கணுக்கால் பகுதியில் இணைத்து உயிர் ஓட்டம் கொடுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment