தொட்டிலில் தூங்கும் குழந்தையின் கனவு

நான் தூங்கும் நேரத்திலே
என் தாயும் வரும்போது
ஒரு முத்தம் தரும்போது
அவள் கண்கள் குழமாகி
என் கண்ணில் விழும்போது
சட்டென்று விழித்திருப்பேன் 
கதறியும் நான் அழுதிருப்பேன்
பசியார பாலில்லை.
அழக்கூட தெம்பில்லை
என் தாய்க்கே சோரில்லை
நான் வேறு ஏன் தொல்லை

அடிக்கின்ற காய்ச்சலிநால்
எறியுதம்மா என்னுடம்பு
சுடுகின்ற தீப்போல
என் தாயின் வயிர்போல

விடிகாலை வரும்போது
என் தாய்க்கு சந்தேகம்
என்னென்று தெரிகிறதா?
என் குழந்தை இருக்கிறதா?

பெண்ணாக பிறந்தாலும்
ஒரு நெல்லை சுவைத்திருப்பேன்
என் தங்கை செய்த்து விட்டாள்
நான் மட்டும் மாட்டி கொண்டேன்

என் வறுமை நீங்கிடுமா?
நல்லரசு தோன்றிடுமா?
என் நாடு செயித்திடுமா?
வல்லரசு ஆகிடுமா?
என் கனவு மெய்ப்படுமா?

by



உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment