2013ம் ஆண்டில் குறைவான வளர்ச்சி கண்ட வேலைவாய்ப்பு சந்தையை உயர்த்தவும், இடைநிலை மற்றும் உயர்பதவி காலியிடங்களையும் நிரப்புவதற்காக மனிதவள மேம்பாட்டு ஆலோசனை நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இதன் விளைவாக புதிய வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்த இந்திய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு மிகப் பெரிய வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதற்காக கார்ப்பரேட் நிறுவனங்கள் அதிக முதலீடுகள் செய்து அதன் மூலம் வேலைவாய்ப்பை பெருக்க திட்டமிட்டுள்ளன. சர்வதேச அளவில் பொருளாதார நிலை சீரடைந்து வருவதால் வேலைவாய்ப்பு துறையை வளர்ச்சி பெற செய்வதற்காக உலக சந்தையில் மிகப் பெரிய அளவில் முதலீடு செய்ய இந்தியா முடிவு செய்திருப்பதாக குளோபல்ஹன்ட் நிறுவன தலைவர் சுனில் கோயல் தெரிவித்துள்ளார்.
2014ம் ஆண்டில் 8.5 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதற்காக ஐடி, ஆயுள் காப்பீடு, வேளாண் வணிகம், உள்கட்டமைப்பு, கல்வி உள்ளிட்ட துறைகளில் அதிக முதலீடுகளை செய்வதற்காக வங்கிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. பெரும்பாலான நிறுவனங்களில் ஒற்றை இலக்க சதவீதத்திலேயே சம்பள உயர்வு ஏற்படுத்தப்படுவதால், 2014ம் ஆண்டில் சிறப்பாக பணியாற்றுபவர்களுக்கு 15 முதல் 20 சதவீதம் வரை சம்பள உயர்வு வழங்கவும் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. தொழிற்துறைகளில் குறைந்தபட்சம் 10 சதவீதம் சம்பள உயர்வு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Post a Comment