ஈரான் நாட்டைச் சேர்ந்த 80 வயதுடைய அமோவ் ஹாஜி என்ற முதியவரொருவர் 60 ஆண்டுகளாக குளிக்காமல் சாதனை படைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார். இளவயதில் தனது வாழ்க்கையில் சந்தித்த கசப்பான அனுபவங்களை தொடர்ந்து, உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் இருந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட அமோவ் ஹாஜி, இவ்வுலக வாழ்க்கையையே வெறுத்து, பற்றற்ற துறவியின் நிலையில் வாழ்ந்து வருகிறார்.

இவரை பிடித்து குளிக்க வைக்க அவரது ஊர்க்காரர்கள் எவ்வளவோ முயன்றும் பலனில்லாமல் போனது.
புகைப்பிடிக்கும் பழக்கத்தைக்கொண்ட முதியவர், கெட்டுப்போன இறைச்சியையும், உயிரிழந்திருக்கும் உயிரினங்களின் மாமிசத்தையுமே விரும்பி உண்கின்றார்.

இந்த சாதனையை இவர் எட்டுவதற்கு முன்னர் 66 வயதான நபரொருவர் 38 ஆண்டுகளாக குளிக்காமல் வாழ்ந்தது தான் சாதனையாக கருதப்பட்டது.
ஆனால் குறித்த சாதனையை தற்போது ஈரானை சேர்ந்த அமோவ் ஹாஜி என்ற 80 வயதுடைய முதியவர் முறியடித்து விட்டார்.

இந்தியாவின் வாரணாசி பகுதியைச் சேர்ந்த கைலாஷ் சிங் என்பவரே முந்தைய சாதனைக்கு சொந்தக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் 1974 ஆம் ஆண்டிலிருந்து 2012 ஆம் ஆண்டு வரை 38 ஆண்டுகளாக குளித்ததே கிடையாது.






உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment