நெல்லை அரசு மருத்துவமனையில்,
கடையநல்லூரை சேர்ந்த ஒரு தம்பதியின் குழந்தை இறந்து விட்டது...

இதை அங்கேயே அடக்கம் செய்ய
யோசித்தனர்...

இதை பயன்படுத்தி கொண்ட தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவன்...

அதை தான் அடக்கம் செய்வதாக கூறி 1000 ரூபாய் பெற்றுக்கொண்டான்...

வாங்கிச்சென்றவன் மருத்துவமனை வளாகத்தில் உள்ள முட்புதரில் தூக்கிவீசிவிட்டு சென்றுள்ளான்......
அரசு மருத்துவமனை வளாகத்தில் இந்த தனியார் ஆம்புலன்ஸ், கார் டிரைவர்களின் ஆதிக்கம் அதிகம்...
யாரும் இறந்துவிட்டால்
காசு பார்ப்பதற்காக சுற்றி கொண்டே வருவார்கள்...

சீரியஸாக இருப்பவல்களின் உறவினர்களிடம் சென்று...

ஊருக்கு கொண்டுபோய் விடுங்கள் என உசுப்பேத்துவார்கள் டிரைவர்களின் புரோக்கர்கள்....

அடக்கம் செய்ய உதவுகிறோம் என்ற பெயரில் கொள்ளை

இப்படி ஏராளம்...

இதை தடுக்க நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் ...



முதலியார்பட்டி கே.எம்.அப்துல் காதிர்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment