நாளை தைப்பொங்கல் திருநாள் கொண்டாட உள்ள நிலையில் சென்னை மெரீனா கடற்கரையை ஆளில்லா விமானம் மூலம் கண்காணிக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
தைப்பொங்கல் திருநாளில் மக்கள் பொங்கல் வைத்து படையலிட்டு உணவு உண்டு வீட்டிற்குள் இருந்தபடியே நாளை கழித்தாலும், மாட்டுப் பொங்கல் மற்றும் காணும் பொங்கல் அன்று, கடற்கரை, பார்க் போன்ற இடங்களுக்கு குடும்பம் மற்றும் உறவினர்கள், தெரிந்தவர்கள், அக்கம் பக்கத்து வீட்டாருடன் சென்று அன்றைய பொழுதை மகிழ்வுடன் கழிப்பது வழக்கம்.

இதனால் காணும் பொங்கல் அன்று சென்னையில் பொழுது போக்கு இடங்கள் அனைத்திலும் கூட்டம் பெருகி கிடப்பது வழக்கம். இதனால் வருட வருடம் முக்கிய கோயில்கள்,  பார்க், பீச் போன்ற இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக இருக்கும்.

இந்த வருடமும் இதே போன்று ஆயிரக் கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கும் நேரத்தில், சென்னை மெரீனா கடற்கரையில் அசம்பாவிதம் ஏதும் நடக்காவண்ணம் தடுக்க, ஆளில்லா விமானம் மூலம் கண்காணிக்க மாநகர காவல்துறை தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறது.  


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment