அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) 

நமதூர் மெயின் பஜாரில் தாருஸ்ஸலாம் பள்ளி அருகே ஒரு பஸ் ஸ்டாப் உள்ளது, தற்பொழுது இதனருகே ஆட்டோக்களை நிறுத்தி வைத்துக்கொண்டு போக்குவரத்தை சீர் கெடுத்துக்கொண்டிருக்கிறார்கள். 

ஏற்கனவே பஜார் அதிகமான வாகன போக்குவரத்தாலும், இருசக்கர வாகன பார்க்கிங்காலும் திக்குமுக்காடிக் கொண்டிருக்கிறது இதில் இவர்கள் வேறு ஆட்டோவை நிறுத்தி வைத்துள்ளார்கள். போதாக்குறைக்கு இப்பொழுது பரசுராமபுரம் தெருவிற்கு செல்லும் வழியில் மேல்புறமும்,கீழ்புறமும்,தொழுகைப் பள்ளிக்கு அருகிலும் நிறுத்துகிறார்கள். 

கிழக்குப் பகுதியைச் சேர்ந்த மாற்றுமதத்தவரான இவர்களுக்கு நமது சமுதாயத்தினர் அதிகம் வசிக்கும் பகுதியில் ஆட்டோவை நிறுத்துவதற்கு அதிகாரம் கொடுத்தது யார்? இந்த பகுதியை கடந்துதான் தாருஸ்ஸலாம் பள்ளியில் படிக்கும் நமது சமுதாய மாணவிகளும்,பெண்களூம் செல்கிறார்கள், 

மேலும் ஆட்டோ ஓட்டுனர்களின் கேலி கிண்டலுக்கும் ஆளாக வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே இந்த நிலை மாறவும், ஆட்டோ ஸ்டாண்டை காலிபண்ணுவதற்கும் தாருஸ்ஸலாம் பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தால் நல்லது.

Shajahan Abidha

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment