கடையநல்லூர் பகுதிகளில் உள்ள ஆறு, கால்வாய், குளங்களில் குப்பைகளோடு, இறைச்சி கழிவுகளும் கொட்டப்படுவதால் சுற்றுசூழல் மாசுபடுவதோடு பல்வேறு தொற்றுநோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடையநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் அதிகளவு விவசாயம் நடைபெறுவதால் இங்கு ஏராள மான குளங்கள், கால்வாய்கள் உள்ளது. கடையநல்லூர் நகர பகுதி வழியாக பாப்பான்கால்வாய், சீவலங்கால்வாய் ஆகிய பிர தான கால்வாய்கள் செல் கிறது.
இதன் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவ சாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. அதோடு நகர பகுதியில்உள்ள அட்டை குளம், புதுக்குளம் உள் ளிட்ட குளங்களும் விவசாயத்திற்கு பயன்பட்டு வருகிறது.
கடையநல்லூர் நக ராட்சி பகுதிகளில் உள்ள குப்பைகள் இந்த கால்வாய், குளங்கள் மட்டுமின்றி அனைத்து நீர் நிலைகளி லும் கொட்டப்படுவதால் நீர்நிலைகள் மாசுபட்டு வருகிறது. அத்துடன் கடையநல்லூர் பகுதிகளில் தினம்தோறும் உணவுக்காக வெட்டப்படும் நூற்றுக்கணக்கான கோழி, ஆடு, மாடுகள் ஆகியவற்றின் கழிவுகளும் நீர்நிலைகளில் கொட்டப்படுகிறது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்வதில்லை. பல பகுதிகளில் துர்நாற்றம் வீசி சுற்றுசூழல் மாசு படுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த 2010ம் ஆண்டு இப்பகுதியில் நிலவிய சுகாதார சீர்கேட்டினால் மர்ம காய்ச்சலுக்கு 50க்கும் மேற்ப்பட்டோர் பலியாயினர். நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். அப்போது கடையநல்லூரை சேர்ந்த வக்கீல் முகைதீன் மதுரை ஐகோர்ட்டில் தொடர்ந்த பொதுநல வழக்கினால் கோர்ட் உத்தரவின்பேரில் பாப்பான்கால்வாய் உட்பட பல்வேறு கால்வாய் மற்றும் நீர் நிலைகளில் தேங்கி கிடந்த கழிவுகள் பல லட்சம் ரூபாய் செலவில் அகற்றப்பட்டு சுகாதாரம் மேம்படுத்தப்பட்டது.
ஆனால் தற்போது மீண் டும் நீர் நிலைகளில் குப் பைகள் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவ்து வாடிக்கையாகி வருகிறது. இதை தடுத்து சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என இப்பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தியும் எவ்வித பயனுமில்லை என பொது மக்கள் புலம்புகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி நீர்நிலைகளில் தேங்கி கிடக்கும் கழிவுகளை அகற்றுவதோடு அனைத்து வார்டுகளிலும் நிரம்பி வழியும் சாக்கடைகளையும் அகற்றி சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளனர்.
Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Post a Comment