கேரள மாநிலத்தில் மது குறித்த சர்ச்சை இன்னும் நீடித்து வரும் நிலையில் புதிதாக வேறொரு சர்ச்சை கிளம்பியுள்ளது. மார் தோமா சிரியன் சர்ச்சின் பேராயர் பிலிபோஸ் மார் கிறிஸ்டோம் திங்கள்கிழமை இன்று அனைத்து சர்ச்களுக்கும் அனுப்பிய தகவலில், மதக்கூட்டங்களில் மது விநியோகம் குறித்து மறுயோசிப்பு செய்யுமாறு கூறியுள்ளார். இது இப்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இதுகுறித்து அங்குள்ள தாழ்த்தப்பட்ட ஹிந்துப் பிரிவு மக்களின் தலைவரான வெள்ளப்பள்ளி நடேசன், இந்தியத் தயாரிப்பான வெளிநாட்டு மதுவகைகள் தடை செய்யப்பட்டிருக்கும் நிலையில், சர்ச்கள் இத்தகைய நடவடிக்கையில் இறங்குவது கேள்விக்குரியது என்று கூறியுள்ளார்.
கேரளத்தில் பொதுக்கூட்டத்தில் மது பயன்படுத்துதல் என்பது, பல டயோசீஸ், கிறிஸ்துவ ஒன்றுகூடல்கள், பிரார்த்தனைக் கூட்டங்களில் மது சூடாகப் பரிமாறப்படுவது, கலால் துறையின் அனுமதியுடன் நடைபெற்றுவருகிறது.
அதுபோல், கிறிஸ்துவ பொதுக்கூட்டங்களுக்கும் மது அளிப்பது என்பது தேவையற்றது என்று கூறியுள்ளார் கிறிஸோஸ்டோம்.
சர்ச்கள் திராட்சை ரசம் வழங்குவது குறித்து மறு யோசனை செய்ய வேண்டும். இது முன்னர் மேற்கொள்ளப்பட்ட பழைய வழிமுறை - மதுவுக்கு பதிலாக!” என்று கூறியுள்ளார்.
கத்தோலிக்க சர்ச் செய்தித் தொடர்பாளர் பால் தெலக்காட்டு, கிறிஸோஸ்டோமின் கருத்து குறித்து தெரிவித்தபோது, இது ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது என்று கூறியுள்ளார். பொதுக் கூட்டங்களில் 'மாஸ் வைன்” என்பது உலக அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. குறைந்தது ஒரு அவுன்ஸாவது பயன்படுத்துதல் என்பது” என்று கூறியுள்ளார்.
அதே நேரம் நடேசன் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், 'கேரளத்தில் சர்ச்கள் 24 மது வடிநீர் ஆலைகளை நடத்தி வருகின்றன. இயேசு கிறிஸ்து தண்ணீரை மதுவாக மாற்றினாராம். இன்று யாருக்கும் அப்படி தண்ணீரை மதுவாக மாற்றும் சக்தி கிடையாது. அப்படி இருக்கும்போது, ஏன் சர்ச்சுகள் தண்ணீரையே அளிக்கக் கூடாது.. அது ஒரு காலத்தில் மதுதான் என்று கருதி?” என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Post a Comment