துபாய் : வளைகுடா நாடுகளில் உள்ள நிறுவனங்களில் மூன்றில் இரண்டு நிறுவனங்கள் வரும் 3 மாதங்களில் வேலைக்கு புதிய ஆட்களை தேர்வு செய்யும் என்று வேலை வாய்ப்பு இணையதளமான பைத்.காம் செய்த சர்வே மூலமாக தெரிய வந்துள்ளது. 67% நிறுவனங்கள் நிச்சயமாக அல்லது அனேகமாக புதிய ஆட்களை தேர்வு செய்யலாம் அதில் 64% நிறுவனங்கள் 6லிருந்து 10பேரை தங்கள் நிறுவனத்திற்கு புதிய வேலைக்கு தேர்வு செய்யலாம்.சர்வேயில் கலந்து கொண்ட 218 அமீரக நிறுவனங்களில் 75% நிறுவனங்கள் வரும் 3 மாதம் முதல் ஒரு வருடத்திற்குள் புதிய வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும் இதில் 21% நிறுவனங்கள் 6லிருந்து 10பேரை தங்கள் நிறுவனத்திற்கு தேர்வு செய்யலாம்.உடனடியாக தேர்ந்தெடுக்கப்படும் வேலைகளில் 19% சேல்ஸ் மேனேஜர் வேலைக்கும், 15% கஸ்டமர் சர்வீஸ் பிரதிநிதிகளுக் கும்,14% மனித வள மேம்பாட்டு வல்லுநர் வேலைக்கும்., 14% ப்ராஜெக்ட் மேனேஜர் வேலைக்கும் 14% எக்ஸிகியூடிவ் அஸிஸ்டென்ட் வேலைக்கும் தேர்ந்த்டுக்கப்படலாம்.
மத்திய கிழக்கு, வட ஆப்பிரிக்கா நிறுவனங்களில் 62% நிறுவனங்கள் நிச்சயமாக அல்லது அனேகமாக புதிய ஆட்களை வரும் 3 மாதங்களுக்குள் தேர்வு செய்யலாம். 

வளைகுடா நாடுகளில் வரும் 3 மாதத்திலிருந்து 1 வருடத்திற்குள் வேலை வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக வேலை வாய்ப்பு இணையத்தின் துணைத் தலைவர் சுஹைல் தெரிவித்துள்ளார். இது இந்த நாட்டிலுள்ள வல்லுனர்களுக்கு உலகின் மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்களில் கால் பதிக்கும் வாய்ப்பாகும்.37% பொதுத்துறை நிறுவனங்கள் அடுத்த 3 மாதங்களுக்குள் வேலைக்கு ஆட்கள் எடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளன.இந்த சர்வேயில் பங்கேற்ற மற்ற வளைகுடா நாடுகளிலும் வேலை வாய்ப்பு நன்றாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. சர்வேயில் பங்கேற்ற 342 சவுதி அரேபிய நிறுவனங்களில் 40% நிறுவனங்கள் நிச்சயமாகவும் 31% நிறுவனங்கள் அனேகமாகவும் அடுத்த 3 மாதங்களில் வேலைக்கு ஆட்கள் எடுப்பதாக தெரிவித்துள்ளன.கத்தார் நிறுவனங்களில் 35% நிறுவனங்கள் நிச்சயமாகவும் 24% நிறுவனங்கள் அனேகமாகவும், குவைத் நிறுவனங்களில் 37% நிறுவனங்கள் நிச்சயமாகவும் 24% நிறுவனங்கள் அனேகமாகவும், ஒமான் நிறுவனங்களில் 30% நிறுவனங்கள் நிச்சயமாகவும் 26% நிறுவனங்கள் அனேகமாகவும், பஹ்ரைன் நிறுவனங்களில் 20% நிறுவனங்கள் நிச்சயமாகவும் 14% நிறுவனங்கள் அனேகமாகவும் அடுத்த 3 மாதங்களில் வேலைக்கு ஆட்கள் எடுப்பதாகவும் தெரிவித்துள்ளன.

Thanks : Dinakaran


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment