மங்களூர்,
உலகில் அதிசயமான சம்பவங்கள் அடிக்கடி நடப்பது உண்டு. அதேபோல, விசித்திரமான சம்பவம் கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் கார்கலா அருகே உள்ள அஜகார் கிராமத்தில் நிகழ்ந்துள்ளது.உடுப்பி மாவட்டம் கார்கலா அருகே உள்ள அஜகார் கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத நாயக். இவர் கார்கலா கோர்ட்டில் நீதிபதியாக உள்ளார். இவரது மனைவி ரேகா. இந்த தம்பதியினருக்கு 18 ஆண்டுகளுக்கு முன்பு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. அவர்கள், அஸ்வினி (வயது 18), அனுராதா (18). இவர்கள் 2 பேரும் சிக்மகளூரில் உள்ள தனியார் பி.யூ.சி. கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி பி.யூ.சி. தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த தேர்வில் இரட்டை சகோதரிகள் 2 பேரும் 600-க்கு 570 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்தனர்.இதுகுறித்து இரட்டை சகோதரிகள் கூறுகையில், நாங்கள் 2 பேரும் 1-ம் வகுப்பில் இருந்தே ஒரே வகுப்பில் தான் படித்து வருகிறோம். எங்கள் இருவருடைய எண்ணமும், கருத்தும் ஒரே மாதிரி தான் இருக்கும். நாங்கள் அடுத்து என்ஜினீயரிங் படிக்க இருக்கிறோம் என்றனர்.


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment