வாரணாசி: வாரணாசி தொகுதியில் வரலாறு காணாத அளவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்குப் பதிவு நடைபெற உள்ள வாரணாசி தொகுதி -முழுவதும் 20,000 துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள வாரணாசி தொகுதியில் நாளை வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் வாரணாசியில் உள்ள பாரதிய ஜனதா அலுவலகத்தில் தேர்தல் அதிகாரிகள் திடீர் சோதனைகள் நடத்தி உள்ளனர். பறக்கம் படையினர் றடத்திய இந்த சோதனையில் தாமரை சின்னம் பொறிக்கப்பட்ட பனியன்கள் உட்பட ஏராளமான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment