கடையநல்லூர் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதையடுத்து அணை களின் நீர்மட்டம் வெகு வாக உயர்ந்து வரு கிறது. இதனால் விவசாயி கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இரண்டு தினங்களுக்கு முன்பு அக்னி நட்சத்திரம் துவங்கிய நிலையில் வெயில் வாட்டி வதைக்குமோ என்று அச்சம் கொண்டிருந்த மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் கடந்த இரண்டு நாட்களாக கடையநல்லூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் அணைகட்டுகளில் மட்டுமின்றி ஆறு மற்றும் குளங்களில் நீர்வரத்து அதிகரித்து நிலத்தடி நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது.
கடையநல்லூர் அருகேயுள்ள கருப்பாநதி அணை யில் வேகமாக உயர்ந்து தற்போது நீர்மட்டம் 41 அடியாக உள்ளது. 72 அடி கொண்ட கருப்பாநதிக்கு தற்போது விநாடிக்கு 200 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அதேபோல் கடையநல்லூரை அடுத்துள்ள மேக்கரை அடவிநயினார் அணையிலும் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகி றது. அணைக்கு விநாடிக்கு 50 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 132 அடி உயரம் கொண்ட இந்த அணையில் தற்போது 30 அடிக்கு தண்ணீர் உள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் நீர் மட்டம் 13 அடி உயர்ந்துள்ளது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் கருப்பாநதி அணை மற்றும் அடவிநயினார் அணைகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. குடிநீர் பிரச்னைக்கும் தீர்வு ஏற்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை துவங்குவதற்கு முன்பே பெய்து வரும் கோடை மழையால் கடையநல்லூர் மற்றும் சுற்று வட்டார பகுதி இந்த ஆண்டு மிகவும் செழிப்பாக இருக்கும் என பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment