கடையநல்லூர் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் இலங்கை அகதிகள் முகாமில் உள்ள 5 வீடுகள் இடிந்து விழுந்தன.
கடையநல்லூரை அடுத்துள்ள போகநல்லூர் பகுதி யில் இலங்கை அகதிகள் முகாம் அமைந்துள்ளது. இந்த முகாமில் சுமார் 150 குடும்பத்தை சேர்ந்த 500க் கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள பல வீடுகள் பழுதடைந்து மோசமான நிலையில் இருப்பதால் புதிய வீடுகள் கட்டி தர வேண்டும் என அரசை வலியுறுத்தி வந்தனர். இதனையடுத்து 150 வீடுகள் கட்ட அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. ஆனால் பணிகள் உடனே துவங்கப்படாத தால் அவர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வந் தனர். தற்போது பணிகள் துவக்க நிலையிலேயே உள்ளது. இந்நிலையில் பெய்து வரும் தொடர்மழையை அடுத்து நேற்று முகாமில் உள்ள வினோ, ஈஸ்வரி, பத்மசீலன் உட்பட 5 பேரின் வீடுகள் இடிந்து விழுந்தன. வீட்டில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக யாருக் கும் காயம் ஏற்படவில்லை.
தகவலறிந்த வருவாய்த் துறை அலுவலர்கள் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். முகாமில் பெரும்பாலான வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் அரசு புதிய வீடுகளை விரைவில் கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் அரசை மீண் டும் வலியுறுத்தியுள்ளனர்.
கடையநல்லூர் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் இலங்கை அகதிகள் முகாமில் வீடுகள் இடிந்து விழுந்தன.


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment