கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் கிருஷ்ண சுவாமி கோயில் இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாகும். இங்கு ஆண்டு தோறும் சித்திரை மாதம் தேரோட்டம் நடத்துவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார தீபாராதனை நடந்தது. இரவில் சுவாமி வீதி உலாவும் நடந்தது.
8ம் நாளான நேற்று காலையில் தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து தரிசனம் செய்தனர். நாளை (7ம் தேதி) மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக்கமிட்டியினர் செய்து வருகின்றனர்.
கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் கிருஷ்ணசுவாமி கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து இழுத்தனர்.
Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Post a Comment