திருநெல்வேலி மாவட்டம் மேலக் கடையநல்லூர் தேவி ஸ்ரீகருமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவை ஒட்டி ஞாயிற்றுக்கிழமை சுமங்கலி பூஜை நடைபெற்றது.
இவ்விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே-4) காப்புக் கட்டுடன் தொடங்கியது. தொடர்ந்து அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசநம், பஞ்சகவ்யம், தீப பூஜை, சங்கு பூஜை, கோ பூஜை, நவாக்ஷரி ஹோமம் நடைபெற்றது.
திங்கள்கிழமை(மே 5) உலக நன்மைக்காகவும், மழை பெருகவும், விவசாயம் செழிக்கவும் வேண்டி சிறப்பு சண்டி ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.
11 நாள்கள் நடைபெறும் இவ்விழாவில் தினமும் அம்பாள் வீதியுலா நடைபெற்றது. மே-9-ஆம் தேதி புஷ்பாஞ்சலி நடைபெற்றது. 8-ம் திருநாளான ஞாயிற்றுக்கிழமை சிறப்பு அலங்கார அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இரவில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்ட சுமங்கலி பூஜை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் வைரவன், எழுத்தர் முத்துக்கிருஷ்ணன், முத்துக்குமார் பட்டர் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :


Post a Comment