கடையநல்லூரில் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் முறையான ஆவணங்கள் இல்லாமல் கொண்டுசென்ற ரூ6 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
செங்கோட்டை சிவில் சப்ளை தாசில்தாரும், தேர்தல் பறக்கும் படை அதிகாரியுமான சுமங்கலி மற்றும் போலீசார் நேற்று அதிகாலை கடையநல்லூர் யூனியன் அலுவலகம் எதிரே வாகனசோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக கார் ஒன்று வேகமாக கடக்க முயன்ற போது அந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதில் அந்த காரில் 6 லட்சம் ரூபாய் இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து வாகனத்தை ஓட்டி வந்த கேரளமாநிலம் ஆலப்புழை மாவட்டம் மாவேலிக்கரையை சேர்ந்த மணிப்பிள்ளை மகன் சதீஷ் (28) என்பவரிடம் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து முறையான ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த 6 லட்ச ரூபாயை பறிமுதல் செய்து செங்கோட்டை தாசில்தார் கோமதிசங்கரநாராயணன் அரசு கருவூலத்தில் ஒப்படைத்தார்
Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Post a Comment