பகல் ஒரு மணி நேர நிலவரப்படி திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் 45.92 சதவிகிதமும், தென்காசி மக்களவைத் தொகுதியில் 54.16 சதவிகிதமும் வாக்குப்பதிவு ஆகியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி, தென்காசி மக்களவைத் தொகுதிகளில் உள்ள திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், ஆலங்குளம், ராதாபுரம், நான்குனேரி, தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் ஆகிய 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருகிறது.
இம்மாவட்டத்தில் 2707 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பகல் 1 மணி நிலவரப்படி திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் 45.92 சதவிகிதமும், தென்காசி மக்களவைத் தொகுதியில் 54.16 சதவிகிதமும் வாக்குப்பதிவு ஆகியுள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment