இன்று உலக சிட்டுக் குருவிகள் தினம் நாடெங்கும்  அனுஷ்டிக்கப்படுகிறது. சிட்டுக் குருவிகள் அழிந்து வரும் இனமாக தற்போது கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு,
அதற்கான விழிப்புணர்வு நாடெங்கும் பல விதங்களில் ஏற்படுத்தப்பட்டும் வருகிறது. இந்நிலையில் இன்று உலக சிட்டுக் குருவிகள தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
மிகவும் சுறுசுறுப்புடன் இருக்கும் சிட்டுக் குருவிகள் மனதை மயக்கும் குரலையும் கொண்டவை. இவைகள் எதனால், எப்படி அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன என்று பலரும் பலவிதத்தில் கூறிவருகின்றனர். செல்போன் கோபுரங்கள்தான் இதற்கு முக்கியக் காரணம் என்று, கூறப்பட்டு வரும் நிலையில், அது மட்டும் காரணமில்லை, கிராமங்களில் கூட முன்பு மாதிரி கூரை வீடுகளும், நாட்டு ஓட்டு வீடுகளும் இல்லாதது, அவைகளுக்கு இரையாக சிறு தானியங்கள் கிடைக்காதது என்றும் கூறப்படுகிறது.
வீடுகளில் முன்பு போல குருவிகள் கூடு கட்டுவதில்லை, மரங்களில் கூட குருவிக் கூடுகள் தொங்குவதில்லை என்றும் சமீபத்தியக் கணக்கெடுப்பு ஒன்று தெரிவிக்கிறது.
இது இவ்வாறிருக்க ஐரோப்பாவின் வசந்தகாலத் தொடக்கத்தை கூகிள் தனது முகப்பில் கீழ்வருமாறு கொண்டாடுகிறது.



உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment