தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வரும் 14–ந்தேதி முதல் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். 14 நாட்களில் 40 தொகுதிகளிலும் அவர் பிரசாரம் செய்கிறார்.
விஜயகாந்த் பிரசாரம்
பாராளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தே.மு.தி.க. இடம்பெறுவது உறுதியாகியுள்ளது. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் இறுதி செய்யப்படாததால், வேட்பாளர்கள் யாரும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
ஆனால், வரும் 13–ந்தேதிக்குள் பா.ஜ.க. கூட்டணி இறுதி செய்யப்பட்டு, யார் யாருக்கு எந்தெந்த தொகுதிகள் என்று ஒதுக்கப்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வரும் 14–ந்தேதி (வெள்ளிக்கிழமை) முதல் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.
இது தொடர்பாக, தே.மு.தி.க. தலைமைக்கழகம் சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:–
14–ந்தேதி தொடக்கம்
இந்திய நாட்டின் 16–வது பாராளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் 24–4–2014 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, கட்சியின் தலைவர் விஜயகாந்த் வருகின்ற 14–3–2014 வெள்ளிக்கிழமை முதல் 27–3–2014 வியாழக்கிழமை வரை 14 நாட்கள் முதல்கட்ட தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
அதன்படி, 14–ந்தேதி (வெள்ளிக்கிழமை) திருவள்ளூர் தொகுதி கும்மிடிப்பூண்டி (மாலை 3 மணி), வடசென்னை தொகுதி கொளத்தூர் (மாலை 5 மணி), ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பல்லாவரம் (இரவு 7 மணி) ஆகிய இடங்களில் விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
15–ந்தேதி (சனிக்கிழமை) அரக்கோணம் தொகுதி ஆற்காடு (மாலை 3 மணி), ஆரணி தொகுதி செய்யாறு (மாலை 5 மணி), வேலூர் தொகுதியில் வேலூர் (இரவு 7 மணி) ஆகிய இடங்களில் விஜயகாந்த் பேசுகிறார்.
கிருஷ்ணகிரி–நாமக்கல்
16–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கிருஷ்ணகிரி தொகுதியில் கிருஷ்ணகிரி (மாலை 3 மணி), தர்மபுரி தொகுதியில் தர்மபுரி (மாலை 5 மணி), சேலம் தொகுதியில் சேலம் (இரவு 7 மணி) ஆகிய இடங்களில் விஜயகாந்த் பிரசாரம் மேற்கொள்கிறார்.
17–ந்தேதி (திங்கட்கிழமை) நாமக்கல் தொகுதியில் நாமக்கல் (மாலை 3 மணி), கரூர் தொகுதியில் கரூர் (மாலை 5 மணி), ஈரோடு தொகுதியில் ஈரோடு (இரவு 7 மணி) ஆகிய இடங்களிலும், 18–ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நீலகிரி தொகுதி ஊட்டி (மாலை 3 மணி), கோவை தொகுதியில் கோவை (மாலை 5 மணி), திருப்பூர் தொகுதியில் திருப்பூர் (இரவு 7 மணி) ஆகிய இடங்களிலும் விஜயகாந்த் பிரசாரம் செய்கிறார்.
பொள்ளாச்சி–கன்னியாகுமரி
19–ந்தேதி (புதன்கிழமை) பொள்ளாச்சி தொகுதியில் பொள்ளாச்சி (மாலை 3 மணி), திண்டுக்கல் தொகுதியில் திண்டுக்கல் (மாலை 6 மணி), ஆகிய இடங்களிலும், 20–ந்தேதி (வியாழக்கிழமை) தேனி தொகுதியில் தேனி (மாலை 3 மணி), மதுரை தொகுதியில் மதுரை (மாலை 5 மணி), விருதுநகர் தொகுதியில் விருதுநகர் (இரவு 7 மணி) ஆகிய இடங்களிலும் விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
21–ந்தேதி (வெள்ளிக்கிழமை) கன்னியாகுமரி தொகுதி நாகர்கோவில் (மாலை 3 மணி), திருநெல்வேலி தொகுதியில் திருநெல்வேலி (மாலை 5 மணி), தென்காசி தொகுதி கடையநல்லூர் (இரவு 7 மணி) ஆகிய இடங்களிலும், 22–ந்தேதி (சனிக்கிழமை) தூத்துக்குடி தொகுதியில் தூத்துக்குடி (மாலை 3 மணி), ராமநாதபுரம் தொகுதியில் ராமநாதபுரம் (மாலை 6 மணி) ஆகிய இடங்களிலும் விஜயகாந்த் வாக்கு சேகரிக்கிறார்.
சிவகங்கை–சிதம்பரம்
23–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) சிவகங்கை தொகுதியில் சிவகங்கை (மாலை 3 மணி), திருச்சி தொகுதியில் திருச்சி (மாலை 5 மணி), பெரம்பலூர் தொகுதியில் பெரம்பலூர் (இரவு 7 மணி) ஆகிய இடங்களிலும், 24–ந்தேதி (திங்கட்கிழமை) தஞ்சாவூர் தொகுதியில் தஞ்சாவூர் (மாலை 3 மணி), நாகப்பட்டினம் தொகுதி திருவாரூர் (மாலை 5 மணி), மயிலாடுதுறை தொகுதியில் மயிலாடுதுறை (இரவு 7 மணி) ஆகிய இடங்களிலும் விஜயகாந்த் பேசுகிறார்.
25–ந்தேதி (செவ்வாய்க்கிழமை) சிதம்பரம் தொகுதியில் சிதம்பரம் (மாலை 3 மணி), கடலூர் தொகுதியில் கடலூர் (மாலை 5 மணி), புதுச்சேரி தொகுதியில் புதுச்சேரி (இரவு 7 மணி) ஆகிய இடங்களிலும், 26–ந் தேதி (புதன்கிழமை) விழுப்புரம் தொகுதியில் விழுப்புரம் (மாலை 3 மணி), கள்ளக்குறிச்சி தொகுதியில் கள்ளக்குறிச்சி (மாலை 5 மணி), திருவண்ணாமலை தொகுதியில் திருவண்ணாமலை (இரவு 7 மணி) ஆகிய இடங்களிலும், 27–ந் தேதி (வியாழக்கிழமை) காஞ்சீபுரம் தொகுதியில் காஞ்சீபுரம் (மாலை 3 மணி), மத்திய சென்னை தொகுதி அண்ணாநகர் (மாலை 5 மணி), தென்சென்னை தொகுதி திருவான்மியூர் (இரவு 7 மணி) ஆகிய இடங்களிலும் விஜயகாந்த் வாக்கு சேகரிக்கிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :


Post a Comment