புதுடில்லி: 'திருமணத்துக்கு முன், உடல் உறவில் ஈடுபடுவது, முறைகேடான செயல்; எந்த மதமும் இதை ஏற்காது' என, டில்லி கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

டில்லியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், டில்லி கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு:
நட்பு, காதல்...:


கடந்த, 2006ல், டில்லியில் பிரபலமான தனியார் நிறுவனத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றினேன். அப்போது, இணையதளம் மூலமாக, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞரின் அறிமுகம் கிடைத்தது. இருவரும், அடிக்கடி சந்தித்தோம். எங்களின் நட்பு, காதலாக மாறியது.என்னை திருமணம் செய்து கொள்வதாக, அந்த இளைஞர் வாக்குறுதி அளித்தார். இதை நம்பி, அவருடன், அடிக்கடி, உடல் உறவில் ஈடுபட்டேன்; இதனால், கர்ப்பமடைந்தேன். ஆனால், அந்த இளைஞர், என்னை திருமணம் செய்ய மறுத்து விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அந்த மனுவில், அந்த பெண் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த டில்லி கோர்ட் நீதிபதி, வீரேந்திர பட் அளித்த தீர்ப்பு:ஒரு பெண், வளர்ந்து, நன்றாக படித்து, பொறுப்பான வேலைக்கு செல்லும்போது, யாராவது ஒரு ஆணுடன் நெருங்கி பழகி, திருமணம் செய்வதாக, அவர் அளிக்கும் வாக்குறுதியை நம்பி, அவருடன் உடலுறவில் ஈடுபடுவது, அந்த பெண்ணுக்கு, பேராபத்தை ஏற்படுத்தும். இதற்கு, சம்பந்தப்பட்ட பெண்ணே, பொறுப்பு. விவரம் தெரிந்த, நன்றாக படித்த பெண்கள், வெறும், வாய்மொழி வாக்குறுதிகளை நம்பி, ஏமாந்ததாகக் கூறுவதை ஏற்க முடியாது. இதை, கற்பழிப்பு குற்றமாகக் கருதவும் முடியாது.

குற்றமில்லை:


திருமணத்துக்கு முன், உடல் உறவில் ஈடுபடுவது, ஒழுக்க கேடான செயல். எந்த மதமும், இதுபோன்ற நடவடிக்கைகளை அனுமதிப்பது இல்லை. 'திருமணம் செய்வதாக, அந்த இளைஞர் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் தான், உடல் உறவுக்கு சம்மதித்தேன்' என, அந்த பெண் கூறுகிறார். ஆனால், இதற்கான எந்த ஆதாரத்தையும், அவர் தாக்கல் செய்யவில்லை. எனவே, இதை, கற்பழிப்பு குற்றமாகக் கருத முடியாது.இவ்வாறு, நீதிபதி தீர்ப்பளித்தா


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment