315 பயணிகளுடன் ஈரானின் மெஷ்ஷாட் நகரை நோக்கிப் புறப்பட்ட சவுதி ஏர்லைன்ஸின் போயிங் 767 விமானத்தின் லேண்டிங் கியரில் கோளாறு ஏற்பட்டதால் சவுதியில் உள்ள மெதீனா விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப் பட்டது.
இந்நடவடிக்கையில் 29 பேர் காயம் அடைந்ததுடன் அதில் 11 பேர் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
மெதீனாவின் பிரின்ஸ் மொஹம்மட்ட பின் அப்துலாஷிஷ் சர்வதேச விமான நிலையத்தில் இவ்விமானம் தரையிறங்கும் முன்னரே விமானத்தின் சக்கரங்கள் விடுபட மறுத்ததால் இது தரையில் மோதிய படி இறங்கியிருக்கலாம் என ஊகிக்கப் படுகின்றது. இத்தகவலை சவுதி ஏர்லைன்ஸின் பேச்சாளர் அப்துல்லா அல் அஜ்ஹர் தொலைபேசியில் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களில் 3 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.
விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்தவர்களில் பலர் ஈரானின் புனித நகரம் ஒன்றுக்குச் சென்று கொண்டிருந்த யாத்திரீகர்கள் ஆவர். இந்நிலையில் விமானம் மிக அவசரமாக தரையிறங்கி சேதமடைய முன்னர் இரு தடவை தரையிறக்கும் முயற்சி தோல்வியில் முடிந்திருந்ததாகவும் கூறப்படுகின்றது. எனினும் விமானம் தரையிறங்கிய பின்னர் தீ விபத்து ஏற்பட்டு அது வெடித்துச் சிதறலாம் என்று தோன்றிய அச்சம் காரணமாக பயணிகள் மிக அவசரமாக அதில் இருந்து வெளியேற முயற்சித்த போதே அநேகமானோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது 24 மணிநேரங்களுக்கு மெதினாவை நோக்கி வரவிருந்த விமானங்கள் யாவும் திசை திருப்பப் பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Post a Comment