7வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்காக வீரர்களை ஏலம் எடுக்கும் நடவடிக்கை இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய ஐபிஎல் விதிமுறைகளின் படி ஒவ்வொரு அணிகளும் ஏற்கனவே தமது அணிகளுக்காக விளையாடிய ஐந்து வீரர்களை மாத்திரம் தமது அணியில் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள முடியும்.
ஏனையவர்களை Right to Match கார்ட் முறையில் மற்றைய அணிகள் மாறி வாங்கிக் கொள்ள முடியும். எதிர்வரும் பெப்ரவரி 12ம் திகதி ஐபிஎல் ஏலம் நடப்பதற்குள் அணிகள் தமது உறுதியான நிலைப்பாட்டை எடுக்க முடிவு செய்துள்ளன.
அவற்றில் பிரதானமாக மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் தமது அணிகளுக்காக தலா ஐந்து வீரர்களையும் தக்க வைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளன. அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் தனது அணிக்காக தோனி, அஷ்வின், சுரேஷ் ரைனா, ஜடேஜா ஆகியோரை தக்கவைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளது. மேலும் தென் ஆபிரிக்காவின் பஃப் தி பிளெஸிஸ் அல்லது மேற்கு இந்தியாவின் டுவேய்ன் பிராவோ ஆகிய வீரர்களில் ஒருவரை தக்கவைத்துக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை அணி சச்சின் டெண்டுல்கர் இல்லாத அணியாக முதன்முறையாக விளையாடவுள்ளது. கேப்டன் ரோகித் ஷர்மா, மற்றும் கிரன் பொல்லார்ட் இருவரும் அணியில் தக்கவைக்கப்படவிருக்கின்றனர். ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவின் புயல் பந்துவீச்சாளராக துவம்சம் செய்த மிச்செல் ஜோன்சன் கண்டிப்பாக மும்பை அணியில் இடம்பெறலாம். அதோடு லசித் மாலிங்கவும் இடம்பெறலாம். தினேஷ் கார்த்திக், ஹர்பஜன் சிங், ராயுடு ஆகியோரையும் தக்கவைத்துக் கொள்ள முயற்சிகள் நடக்கின்றன.
பெங்களூர் ரோயல் சேலஞ்சர்ஸை பொருத்தவரை, விராத் கோலி, மேற்கு இந்தியாவின் கிரிஸ் கேய்ல் , ஏபி த வில்லியெர்ஸ் அணியில் தக்கவைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து விராத் கோலி, கிரிஸ் கேய்ல் ஆகியோர் தமது மகிழ்சியை பகிர்ந்துள்ளனர். பெங்களூர் அணிக்கு தலைமை பயிற்றுனராக டேனியல் விட்டோரி நியமிக்கப்பட்டுள்ளார். ராகுல் டிராவிட் இல்லாத நிலையில் ராஜஸ்தான் ரோயல்ஸ் ஷேன் வட்சன் தலைமையில் களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Post a Comment