சென்னை: ஓட்டேரி காவல் நிலையத்தில் தேசிய தலைவர் பெயரை  கொண்ட ஒருவர் சிறப்பு எஸ்ஐயாக வேலை பார்க்கிறார். 47 வயதாகும்  அவருக்கு மனைவி, மகன் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு பணி  முடிந்து எஸ்ஐ வீட்டுக்கு புறப்பட்டார். அயனாவரம் பனந்தோப்பு  காலனியில் உள்ள போலீஸ் பூத்துக்கு சென்ற அவர், சுமார் 30 வயதுள்ள  இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது,  அதே பகுதியை சேர்ந்த ஒருவர், போலீஸ் பூத் வழியாக சென்றுள்ளார்.  அதன் உள்ளே கெஞ்சலும் கொஞ்சுமொழியும் கேட்டு திகைத்தார்.  பூத்துக்குள் நைசாக எட்டிப் பார்த்தார். அங்கு எஸ்.ஐ.யும், பெண்ணும்  கூடிக் குலவிக்கொண்டிருப்பதை பார்த்து திடுக்கிட்டார். உடனே  ஓடிச்சென்று அப்பகுதி மக்களிடம், கூறினார். ஏராளமான பொதுமக்கள்  போலீஸ் பூத்தை நோக்கி ஓடிவந்தனர். வெளியில் பொதுமக்கள்  கூடியதை பார்த்ததும் அவசரஅவசரமாக போலீஸ் உடையை அணிந்து  கொண்டு எஸ்.ஐ. வெளியில் வந்தார். அவரை ஒட்டியபடி  இளம்பெண்ணும் வந்தார். பொதுமக்கள் எஸ்ஐயை மடக்கி பிடித்து,  பொது இடத்தில இப்பிடியா நடந்துப்ப.. என்று திட்டினர். தகவலறிந்து  ஓட்டேரி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். போலீஸ் பூத்தில்  இருந்த எஸ்ஐ மற்றும் அவருடன் இருந்த பெண்ணை காவல் நிலையம்  அழைத்து சென்று விசாரித்தனர்.

எஸ்ஐ தன்னை வற்புறுத்தி அழைத்து வந்து உல்லாசமாக இருந்ததாக  போலீசாரிடம் அந்த பெண் கூறியதாக தெரிகிறது. இதைதொடர்ந்து  எஸ்ஐயை உடனடியாக அமைந்தகரை காவல் நிலையத்துக்கு பணியிட  மாற்றம் செய்து, துணை கமிஷனர் சுதாகர் உத்தரவிட்டார். இதுகுறித்து  அப்பகுதியினர் கூறுகையில், பொதுமக்களின் பாதுகாப்புக்காகத்தான்  போலீஸ் பூத் அமைத்திருக்கிறார்கள். அதை தனது பள்ளியறையாக  எஸ்ஐ மாற்றியிருக்கிறார். இங்குள்ள காவலர்கள் சிலர் பொதுமக்கள்  முகம் சுழிக்கும்படி இப்படித்தான் நடந்துகொள்கிறார்கள். பலமுறை புகார்  செய்திருக்கிறோம். எந்த நடவடிக்கையும் இல்லை. டிரான்ஸ்பர் மட்டும்  செய்தால் இந்த போலீஸ் அதிகாரிகளுக்கு பயம் வராது. போகிற  இடத்திலும் இந்த வேலையைத்தான் செய்வார்கள். சஸ்பெண்ட் செய்ய  வேண்டும். அப்போதுதான் புத்தி வரும் என்று ஆவேசமாக  தெரிவித்தனர்.

சிறப்பு பணியா?

தோப்புக்குள் நடக்கும் விஷயங்களை போலீஸ் பூத்துக்குள் நடத்தி  காட்டிய எஸ்ஐக்கு திருநின்றவூரில் மனைவி, மகன் உள்ளனர். தினமும்  அங்கு சென்று வருவதற்கு சிரமமாக உள்ளதாக கூறி, வில்லிவாக்கம்  பகுதியில் வீடு எடுத்து தங்கியுள்ளார். வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த  பெண் ஒருவருடன் குடும்பம் நடத்துவதாக, போலீஸ் வட்டாரத்தில்  பேசப்படுகிறது. மேலும், அவரது பணி வியாசர்பாடி காவல் நிலையத்தில்  மட்டுமே. ஆனால், இதுபோன்ற சம்பவங்களில் அவர் ஈடுபடுவதால்,  அவரை மற்ற காவல் நிலையங்களில் சிறப்பு பணி என கூறி மாற்றம்  செய்யப்படுவதாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment