இந்நிலையில் சமீப காலமாக புளியங்குடி, வாசுதேவநல்லூர், சிவகிரி பகுதிகளில் வன விலங்கு வேட்டை விலை உயர்ந்த மரங்கள் வெட்டி கடத்தல் என்பது சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. இதனை தடுக்க வேண்டிய வனத்துறை அதிகாரிகளோ கண்டும் காணாமல் இருந்து வருகின்றனர்.
அதற்கு உதாரணமாக வனப்பகுதியில் மாதாந்திர இரவு, பகல் ரோந்துப் பணி மற்றும் நாள்தோறும் பகல் நேரங்களில் கூட ரோந்துப்பணி என்பது இல்லாமல் போனதே காரணமாகும்.
இந்நிலையில் வனப்பகுதியில் அன்னியர்கள் அத்து மீறி நுழைந்து சமூக விரோத செயல்களில் ஈடுபடு வோரை கண்காணித்து நடவடிக்கை எடுக்க புளியங்குடி வனச்சரகத்தில் கோட்டை மலை மற்றும் சோமறந்தான் ஆகிய பீட்களிலும், சிவகிரி வனச்சரகத்தில் கருப்பசாமி கோவில் பீட்டிலும் சுமார் ரூபாய் 5லட்சம் செலவிலும் கண்காணிப்பு கோபுரங்கள் கட்டப்பட்டன. அந்த 3 கண்காணிப்பு கோபுரங்களும் கட்டப்பட்டதோடு சரி. அதன்பின் அவைகளை பயன்படுத்தாமல் அப்படியே வனத்துறை கிடப்பில் போட்டுள்ளது. இதனால் 3 கண்காணிப்பு கோபுரங்களும் மழையிலும், வெயிலிலும் சிதிலமடைந்து வருகிறது.
இதனை தங்களுக்கு சாதகமாக சமூக விரோதக்கும்பல் பயன்படுத்தி கொண்டு வனவிலங்கு வேட்டை மற்றும் மரம் வெட்டி கடத்தல், மணல் திருட்டிலும் சர்வ சாதாரணமாக ஈடுபட்டு வருகிறது. இதற்கு வனத்துறையில் உள்ள சில கருப்பு ஆடு களும் உடந்தையாகவே உள்ளது.
எனவே மேற்குத்தொடர்ச்சி மலை வனப்பகுதியை பாதுகாத்திட கலெக்டரும், வனத்துறையும் நடவடிக்கை எடுக்கவேண்டுமென பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.
Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Post a Comment