செங்கோட்டையில் நகராட்சி வணிக வளாகத்தை இடித்தபோது சுவர் இடிந்து விழுந்து 3 பேர் தொழிலாளர்கள் பலியாகினர். பலியானவரின் உடலை எடுக்க விடாமல் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பதற்றம் காரணமாக போலீசார் குவிக்கப்பட்டனர்.
நெல்லை மாவட்டம், செங்கோட்டை பஸ் நிலையம் அருகே நகராட் சிக்கு சொந்தமான வணிக வளாகம் உள்ளது. இந்த வளாகம் கடந்த 1982ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த வளாகத்தில் 8 கடை கள் இயங்கி வந்தன. தற்போது வணிக வளாகம் மிகவும் பழுதடைந்துள்ளதால் கடந்த 50 நாட்களுக்கு முன் கட்டிடத்தை இடிப்பதற்கு டெண்டர் விடப்பட்டது. செங்கோட் டையை சேர்ந்த நாகூர் என்பவர் டெண்டர் எடுத்திருந்தார்.
இந்நிலையில், நேற்று இந்த கட்டிடத்தை இடிக் கும் பணியில் 8 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். நேற்று மாலை முதல் தளத்திலுள்ள சுவரை இடித்தபோது எதிர்பாராதவிதமாக அது தொழிலாளர் கள் மீது சரிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி செங்கோட்டை மே லூர் கதிரவன் காலனியை சேர்ந்த நடராஜ் மகன் முத்துக்குமார் (27), கிருஷ்ணன் மகன் ராஜிவ் (30), கருப்பை யா மகன் கணபதி (30) ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
தகவல் அறிந்து இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தோரின் உறவினர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் அங்கு கூடினர். அவர்கள் இறந்தவர்களின் உடலை பார்த்து கதறி அழுதனர். முத்துக்குமார், ராஜிவ் உடல்களை போலீ சார் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கணபதியின் உடலை போலீசார் எடுக்க முயன்ற போது அவரது உறவினர் கள் உடலை எடுக்க விடா மல் தடுத்து சாலை மறிய லில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப் போது, கலெக்டர் மற்றும் செங்கோட்டை நகராட்சி தலைவர் சம்பவ இடத்திற்கு வரவேண்டும் என்று வலியுறுத்தினர்.
தென்காசி ஆர்டிஓ ரெக்கோபயாம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், இறந்தவர்களின் உறவினர்கள் மறியலை கைவிடவில்லை. மேலும், சம்பவ இடம் நடந்த நக ராட்சி அலுவலகம் எதிரே யும், வாஞ்சிநாதன் சிலை அருகேயும், வனத்துறை அலுவலகம் அருகேயும் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக செங்கோட்டை வெளியே யும், உள்ளேயும் எந்த வாகனமும் நுழைய முடியவில்லை. கேரளா செல் லும் பஸ்கள் மற்றும் லாரி கள் நீண்ட வரிசையில் சா லையில் அணிவகுத்து நின் றன. இதையடுத்து, பஸ் நிலையம் பகுதியில் கடை கள் அனைத்தும் அடைக்கப்பட்டன.
இரவு வரை மறியல் போராட்டம் நீடித்தது. இதையடுத்து, தூத்துக்குடி எஸ்பி துரை, நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சுரேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த் தை நடத்தினர்.
ஆனால், மறியலில் ஈடுபட்டவர்கள் போலீஸ் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், இறந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், உரிய நிவாரணமும் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என போலீசார் உறுதியளித்தனர். அதன்பின்னரே கணபதியின் உடலை எடுக்க பொதுமக்கள் அனுமதித்தனர். இதை யடுத்து சாலை மறியல் முடிவுக்கு வந்தது.
இறந்த ராஜிவுக்கு சண்முகத்தாய் என்ற மனைவி உள்ளார். கணபதிக்கு கலா என்ற மனைவியும், காவ்யா என்ற மகளும், தருண் என்ற மகனும் உள்ளனர்.
உயிரிழந்த கணபதியின் குழந்தைகள் தருண், காவ்யா.
சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த ராஜிவ், முத்துக்குமார், கணபதி.
Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Post a Comment