
குற்றாலத்தில் கடந்த 4 தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று பகல் முழுவதும் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. மதியம் பலத்த மழை கொட்டியது. பின்னர் விட்டு, விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. மதியம் பெய்த பலத்த மழை காரணமாக குற்றால அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மெயினருவியில் பாதுகாப்பு வளைவைத் தாண்டி தண்ணீர் ஆக்ரோஷமாக கொட்டியது. ஐந்தருவியில் ஐந்து பிரிவுகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுந்தது. பழைய குற்றாலத்திலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் படிக்கட்டுகளில் வழிந்தோடியது. புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட பிற அருவிகளிலும் மதியத்திற்கு பிறகு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கோடை மழை என்பதால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் செம்மண் நிறத்தில் கலங்கலாக விழுந்தது.
சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி ஆகியவற்றில் மாலை முதல் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக வெளியூரிலிருந்து வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர். கடந்த மூன்று தினங்களாக குற்றாலத்தில் கத்திரி வெயில் காலம் என்பதே தெரியாத அளவிற்கு பகல் நேரம் முழுவதும் மேகமூட்டத்துடன் குளிர்ச்சியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Post a Comment