புதுடெல்லி: பிசிசிஐ அணியின் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் முஹம்மது அசாருதீன் ராஜஸ்தான் மாநிலத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் அசாருதீன் ராஜஸ்தான் மாநிலத்தின் டோங்-சவாய் மதோபூர் தொகுதியில் போட்டியிடுவதற்கான தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவர் அங்கு பா.ஜ.க. வேட்பாளர் சுக்பீர் சிங் ஜான்புரியாவை எதிர்த்து போட்டியிடுகிறார். ராஜஸ்தானின் 5 மக்களவைத் தொகுதிகளுக்கு வரும் 24-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
அசாருதீன் தற்போது உத்தரபிரதேச மாநிலம் மொரதாபாத் எம்.பி.யாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Post a Comment