இதன் மூலம் அரசியலில் ததஜ ஒரு தெளிவற்ற நிலையை கொண்டிருப்பதையே காணமுடிகிறது! இருப்பினும் இறுதி முடிவைக் கொண்டே எதையும் தீர்மானிக்க முடியும் என்பதால் இந்தத் தேர்தலில் அதன் இறுதி முடிவு பெருமப்பாலும் சமுதாயத்துக்கு சாதகமாகவே இருப்பதால் அதை வரவேறகிறோம்!
33 தொகுதிகளில் திமுகவுக்கு ஆதரவு எனும் நிலை மதவாத சக்திகளுக்கும் அதன் தோழமைகளுக்கும் விழுந்த சம்மட்டி அடியாகவே இருக்கும்! என்பதால் மனதார வரவேற்கிறோம்!
இரண்டாவதாக மதவாத எதிர்ப்பில் நம்முடன் தோளோடு தோள் நிற்கும் திருமாவளவனுக்கும், கடந்த காலங்களில் நம்மோடு நின்ற புதிய தமிழகம் கிரிஷ்ணசாமி அவர்களுக்கு கொடுக்கும் ஆதரவையும் தொலை நோக்கான முடிவாகவே பார்க்கிறோம் ! மனதார வரவேற்கிறோம்!
அடுத்ததாக தர்காவாதியாக இருந்தாலும் கடந்த காலங்களில் இட ஒதுக்கீடு குறித்த பிரதமர் சந்திப்பு உள்ளிட்டவைகளை ஏற்படுத்திக் கொடுத்தவரும், சமுதாயப் பிரமுகருமான ஹாருன் மற்றும் குமரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளருக்கான ஆதரவு கூட உங்கள் பார்வையில் சரியானதாக இருக்கும் எனும் நம்பிக்கை உள்ளதால் அதையும் கூட வரவேற்கிறோம்!
ஆனால் மயிலாடுதுறையில் மமக வேட்பாளரை விட்டு விட்டு
மணிசங்கர் ஐயருக்கு ஆதரவு எனும் நிலைதான் தங்களின் சமுதாய அக்கரையில் சந்தேகம் கொள்ள வைக்கிறது! இதில் மமக ஆதரவு எனும் நிலை எடுத்திருந்தால் எங்கேயோ உயர்ந்திருபீர்கள்!
இது உங்களுக்கு பாதகமான முடிவும் கூட ! எப்படி என்றால்
ஒரு வேளை மணிசங்கர் ஐயர் வெற்றி பெற்றால் நீங்கள் சமுதாயத் துரோகி என தூற்றப்படுவீர்கள் !
உங்களின் ஆதரவால் வாக்குகள் பிரிந்து அதிமுக வெற்றி பெற்றால் நீங்கள் எதற்காக கூட்டணியை விட்டு வெளிஏறினீர்ர்களோ அது நடக்கும் ! அப்போதும் துரோகி என்று தூற்றப்படுவீர்கள் !
அல்லாஹ் நாடி மமக ஜெயித்து விட்டால் உங்கள் பிரசாரத்தால் எந்தத் தாக்கமும் இல்லை என்பதை அரசும் , நீங்கள் ஆதரித்த கட்சிகளும் உணர்ந்து கொள்ளும் ! வெறும் கையை விரித்துக் காட்டுவது போன்ற செயல் தான் இது!
மயிலாடுதுறையில் ததஜ தேர்தலில் நின்று தமுமுகவினரோடு நேரடி போட்டியில் ஈடுபட்டு தோற்றால் என்ன பிரதிபலிப்பை ஏற்படுத்துமோ அதுதான் ஏற்படும்! அது எப்படியும் ததஜவுக்கு பின்னடைவையே ஏற்படுத்தும்!
ஆக மொத்தத்தில் மயிலாடுதுறையில் உங்களுக்கு எதிரான முடிவையே எடுத்து உள்ளீர்கள் !
38 தொகுதிகளில் உங்களின் முடிவை வரவேற்கும் என்னைப் போன்றவர்களால் மயிலாடுதுறை முடிவை ஏற்றுக் கொள்ள முடியவில்லை !
இவண்
செங்கிஸ் கான்
Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Post a Comment