இதையடுத்து மக்களவை தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
மோடிக்கு எதிராக பலமான ஒரு பொது வேட்பாளரை நிறுத்த மதசார்பற்ற தலைவர்கள் அனைவரும், ஒருமித்த கருத்துடன் முயற்சித்தமைக்கு கைமேல் பலன் கிட்டியுள்ளது.
முதலாவதாக, கவ்மி ஏக்தா தளம்(QED) கட்சியின் சார்பாக முக்தார் அன்சாரி என்ற வேட்பாளர் நிறுத்தப்படுவதை அறிந்த சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ், தனது கட்சியின் வேட்பாளரை வாபஸ் பெற்றுக் கொண்டு, முக்தார் அன்சாரியை ஆதரிப்பதாக அறிவித்திருந்தார்.
இதனிடையே, மோடியை தோற்கடிக்க எந்த தியாகத்தையும் செய்யத் தயார் என, கவ்மி ஏக்தா தளம் கட்சியின் தலைவர் அத்தர் ஜமால் கூறியுள்ளார்.
அதாவது,மோடியை தோற்கடிக்க 'ஆம் ஆத்மி கட்சி'யின் அர்விந்த் கெஜ்ரிவால் தான் பலமான வேட்பாளர் என்றால், அவருக்கு ஆதரவாக அன்சாரியை தாங்கள் வாபஸ் வாங்கவும் தயார், என்று கூறியுள்ளார் அத்தர் ஜமால்.
இந்த அறிவிப்பு நாடு முழுவதும் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அரசியல் விமர்சகர்கள்,
"இச்சம்பவங்கள் அனைத்தும் மோடியின் படுதோல்வியை உறுதிசெய்வதாக உள்ளது. மேலும் மதவாத அரசியலுக்கு மக்கள் கொடுக்கும் மரணஅடியாக இத்தோல்வி இருக்கும்." என்றும்,தெரிவித்துள்ளனர்.
நன்றி- முகவை ரஹமத்துல்லாஹ்
Tweet
Post a Comment