கடந்த ஒரு தினங்களுக்கு முன்பு அ தி மு க சார்பில் ஜெயாலலிதா பிறந்த நாளை கடையநல்லுரில் உள்ள அ தி மு க வை சார்ந்த முஸ்லீம் பெயர் கொண்ட சகோதர்கள் பெரிய தர்காவிலும் , பெரிய கோவிலிலும்(இரண்டும் ஓன்று தான் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது ) சென்று வழிபட்டார்கள் இதனை கடையநல்லுரில் உள்ள சகோதர்கள் கடுமையாக தவறு என்று ஆட்சோபனை செய்து கருத்துகளை முகநூளில் பதிவு செய்தும், சேர் செய்தும் வருகிறார்கள். 
சகோதர்களின் கண்டன குரல் மிக மிக பாராட்டகூடிய ஒன்று.

அ தி மு க வில் உள்ள இவர்கள் செய்த இந்த பாவமான, மோசமான செயலை ஒருபோதும் யாரும் ஆதரிக்க முடியாது.

ஆனால் இதே இழி செயலை அதவும் முழுக்க முழுக்க முஸ்லிம்களை நிர்வாகிகளாகவும் ,முஸ்லிம்களை உறுப்பினர்களாக கொண்ட SDPI, PFI ஆகிய அமைப்பை சார்ந்தவர்கள் செய்த இந்த இழி செயலை நம்மில் எத்தனை சகோதர்கள் கண்டித்தோம் ?

இருவரும் ஒட்டு அரசியல்வாதிகள் தான் என்பதில் மாற்று கருத்து இல்லை.

கண்டிப்பதில் ஏன் இந்த முரண்பாடு ? ஒரு கண்ணில் விஷம் மற்றொரு கண்ணில் பாலா ?

இது போன்ற தவறை எந்த அரசியல் அல்லது அமைப்பு சார்ந்த முஸ்லீம் சகோதர்கள் செய்தால் கண்டிப்போம்!

தவறு யார் செய்தாலும் தவறுதான். இது தான் ஒரு நம்பிக்கையாளனின் (மூமின்) நிலைபாடாக இருக்க வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு .


பேட்டை தவ்ஹீத் சகோதர்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment