![]() |
Help |
2 தினங்களுக்கு முன்பாக என்னைச் சந்திப்பதற்காக வருகை புரிந்தார். வரும் பொழுதே மிகவும் சோர்வாகக் காணப்பட்டார். ஏற்கெனவே அறிமுகமானவர் தான். அமரச் சொல்லி காரணம் கேட்டேன். கண்கள் கலங்கியபடி, தனது மனைவியின் இரு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டது. ஏதாகிலும் உதவி செய்யுங்கள் என்றார். தற்பொழுது திருநெல்வேலி Kidney Care Centre-ல் டையாலிசிஸ் செய்து கொண்டிருப்பதாகவும், தன் மனைவியின் தாய் கிட்னி கொடுக்க முன்வந்திருப்பதாகவும் சொன்னார். மருத்துவரின் சான்றைக் காட்டினார். 4 இலட்ச ரூபாய் வரை செலவாகும் எனச் சான்று கொடுத்திருந்தார். அரசுக் காப்பீட்டுத் திட்டத்தில் 1 இலட்சம் கிடைக்கும் என்றார். மீதி..? முகம் தெரியாத இறைவன் மீது கோபம் வந்தது. எளியவனாய் பூமியில் மனிதர்களைப் பிறக்க வைத்துவிட்டு அவர்கள் செலவு மேற்கொள்ள முடியாத வகையில் ஒரு பெரும் நோயையும் கொடுத்து அல்லாட வைப்பதேன்..? எளியவா்களால் இது போன்ற மருத்துவச் செலவுகளை மேற்கொள்ளும் வசதி இல்லை. அப்படியானால் அவர்களுக்கு யார் தான் உதவி செய்வது? ..
சுரேஷின் நிலைமை மிகவும் பரிதாபகரமாக இருந்தது. ஒரு சாதாரண, சராசரி ஏழையால் 5 லட்சம் கடன் வாங்கி செலவளிக்க முடியுமா? கடன் வாங்கினாலும் அதற்கான வட்டியைச் செலுத்த முடியுமா? எத்தனை பேரிடம் சென்று நன்கொடை கேட்க முடியும்? எத்தனை பேரால் கொடுக்க முடியும்? அப்படியே கொடுத்தாலும் எவ்வளவு கொடுக்க முடியும்? சரி என்னாலும் தான் என்ன செய்ய முடியும்? இதைப் போல் எத்தனை பேர் இருக்கின்றார்களோ. அத்தனை பேருக்கும் நம்மால் உதவிகள் செய்ய முடியுமா.? நினைத்துப் பார்க்கவே ஆயாசமாய் இருந்தது.
பதில் எதுவும் சொல்ல முடியாமல், அவரை அனுப்பிவிட்டேன். அவரை அனுப்பிவிட்டாலும் மனம் உழன்று கொண்டே இருந்தது. மறுநாள் காலையில் அலுவலகத்தில் வந்து உட்கார்ந்ததும், என் செல்ல மகள் ரெய்னி தன் வகுப்பு சக மாணவர்கள் ஒரு சிலருடன் என்னைச் சந்திக்க வந்தாள். ''என்னடா.. என்ன விஷயம் என்றேன்''. தன் கையில் வைத்திருந்த ஒரு பொட்டலத்தைக் கொடுத்தாள்.
என்ன இது? பிரித்துப் பார்த்தேன்..
சில்லறையாக 470 ரூபாய் இருந்தது.
என்ன காசு இது?
''அப்பா.. நேற்று ஒருத்தர் அவங்க மனைவிக்கு உடம்பு சரியில்லன்னு சொன்னார் இல்லையா.. நாங்க எங்க friends எல்லோரும் சேர்ந்து நாங்கள் வைத்திருந்த காசைச் சேர்த்து கொண்டு வந்திருக்கிறோம்.அவங்களுக்
நான் திகைத்துப் போனேன்..
யாருமே இந்தக் குழந்தைகளிடம் கேட்கவே இல்லையே.. அவர்களாகவே விஷயத்தைக் கேட்டு, அவா்களாகவே தங்கள் கையில் வைத்திருந்த காசைப் போட்டு கொண்டு வந்திருக்கின்றார்களே..
சட்டென்று நெற்றியில் பொறி தட்டிற்று..
“சிறு துளி பெரு வெள்ளம்..”
உடனே ஆசிரியர்களுக்கு ஒரு சுற்றறிக்கை விட்டேன். உதவ முடிந்தவர்கள் உதவுங்கள் என்று. அடுத்த அரைமணி நேரத்தில் என் மேஜையில் எல்லாம் சேர்த்து 50,000 ரூபாய் சேர்ந்தது.
மனம் மகிழ்ந்தது. நம்பிக்கை வந்துவிட்டது. சுரேஷ் மனைவிக்கு எப்படியும் உதவிகள் கிடைத்துவிடும் என்று தோன்றுகிறது. நீங்களும் சிறு துளியாய் இருக்க விரும்பினால் 9942793894 ல் சுரேஸைத் தொடர்பு கொள்ளுங்கள். இன்று வரை அப்படி இப்படி என்று இரண்டரை லட்சம் ரூபாய் சேர்ந்துவிட்டது. ஆப்ரேஷனுக்கான ஏற்பாடுகள் தொடங்கிவிட்டன. இன்னும் ஓரிரு தினங்களில் ஆபரேஷன் தொடங்கிவிடும். நீங்களும் இதற்கு உதவலாம். நீங்கள் நேரடியாக மருத்துவமனைக்கு டி.டி யாக எடுத்து அனுப்பலாம் அல்லது புளியங்குடி ஏ.வி.எஸ். மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியர் லயோலா இக்னேஷியஸ் அவர்களின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பினால் அதனை அவர்கள் மருத்துவமனையில் ஒப்படைத்து விடுவார்கள்.
R. Loyola Ignatius, State Bank of India, Puliangudi Branch, SB a/c No:30080198300 IFS Code :SBIN0005202, Branch code: 05202. ( Layola phone number: 9944237444)
- அருள் சாமுவேல், தலைமையாசிரியர்,
புளியங்குடி ஏ.வி.எஸ். மேல்நிலைப்பள்ளி.
(இதற்கான முழு முயற்சி எடுத்து வரும் புளியங்குடி ஏ.வி.எஸ். மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டுக்களும் நன்றியும். முடிந்தளவு பகிருங்கள். நன்றி.
Thanks : Ambuja Simi
Tweet
Post a Comment