சென்னை : இவ்வருடம் (2014) சவூதி அரேபியாவிற்கு ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
...
இதற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் விநியோகிக்கப்பட இருக்கிறது. விண்ணப்ப படிவங்களை எண்.13, ரோஸி டவர் (மூன்றாம் தளம்), மகாத்மா காந்தி சாலை (நுங்கம்பாக்கம்), சென்னை என்ற முகவரியில் இயங்கும் தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் செயலாளர் மற்றும் செயல் அலுவலரிடமிருந்து இன்று முதல் பெற்றுக் கொள்ளலாம். அல்லது ஹஜ் விண்ணப்பங்களை ஹஜ் கமிட்டி இணைய தளத்திலிருந்து தரவிரக்கம் செய்தோ அல்லது நகலெடுத்தோ பயன்படுத்தலாம்.

வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே பயணம் மேற்கொள்ள இயலும் இப்புனித ஹஜ் பயணத்திற்கு மார்ச் 15ஆம் தியதி அல்லது அதற்கு முன்பு பெறப்பட்டு, 31-01-2015 வரையில் செல்லத்தக்கதான கடவுச்சீட்டை (பாஸ்போர்ட்) விண்ணப்பதாரர்கள் வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாய நடைமுறை. மேலும், விண்ணப்பதாரர் ஐஎஃப்எஸ்சி (IFSC)) குறியீடு நடைமுறையிலிருக்கும் வங்கியிலுள்ள தங்களது கணக்கு விபரங்களையும் விண்ணப்பத்தில் தெரிவிக்க வேண்டும்.

நபர் ஒருவருக்கு திருப்பித் தரப்படாத பரிசீலனைக் கட்டணமான 300 ரூபாயை பாரத ஸ்டேட் வங்கியின் இணைப்பு வங்கித் திட்டத்தின் மூலம் இந்திய ஹஜ் குழுவின் கணக்கு எண் 33564923057 - ல் செலுத்தி அதற்கான ரசீது நகலை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் இணைத்து மார்ச் 15ஆம் தியதிக்குள் சமர்பிக்க வேண்டும்."


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment