உலகில் 1.2 பில்லியன் பாவணையளர்களைக் கொண்ட மிகப்பெரிய சமூக வலைத்தளமான பேஸ்புக் இன்று தனது 10 வது பிறந்த தினத்தை கொண்டாடுகிறது.
2004ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ம் திகதி மார்க் சூர்கர்பேர்கினால் ஹவார்ட் பல்கலைக் கழகத்தில் Sophomore எனும் பெயரில் தொடங்கப்பட்டது பேஸ்புக் வலைத்தளம். அடுத்த ஒரு மாதத்திற்குள் இங்கிலாந்தின் பல்வேறு பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளில் பிரபலமானது.

2004 ஜூன் மாதம் தனது தலைமை அலுவலகத்தை கலிஃபோர்னியாவில் உள்ள பாலோ அல்டோவுக்கு மாற்றம் செய்தது. 2004 செப்டெம்பர் மாதம், 'Wall' எனும் பகுதியை அறிமுகம் செய்தது. பொதுமக்கள் தங்களது தனிப்பட்ட நடவடிக்கைகள், விருப்பங்களை இதில் பகிர்ந்து கொள்ள முதன்முதலில் வழிவகை செய்தது.

அதே மாதமே, அவரது முன்னாள் நண்பர்களான டுவின்ஸ் கெமரூன், டிலெர் விங்க்லேவொஸ் ஆகியோர்  சூர்கர்பேர்க் மீது வழக்குப் பதிவு செய்தனர்.  பேஸ்புக் தங்களது ஐடியாவை திருடிவிட்டதாக இவர்களது குற்றச்சாட்டு.

2006 மே மாதம் பேஸ்புக் சமூக வலைத்தளம், மின் அஞ்சல் முகவரி கொடுத்து இதில் இணைந்து கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தியது. 2006 செப்டெம்பர் மாதம், பேஸ்புக்கில் 13 வயதை கடந்த எவரும் இணைந்து கொள்ளலாம் என அறிவித்தது.

2008 மார்ச் மாதம், முன்னாள் கூகுள் நிறுவனத்தின் தலைமை இயக்குனரான ஷெரில் சாண்ட்பேர்க், அங்கிருந்து பேஸ்புக்கிற்கு தாவினார்.  2008 ஏப்ரல் மாதம் பேஸ்புக் சேட்டிங் வசதியை அறிமுகப்படுத்தியது. 2009 பெப்ரவரி மாதம் 'Like' பட்டனை அறிமுகப்படுத்தியது.

2009 ஜூன் மாதம், அமெரிக்காவின் மிகப்பெரிய சமூகவலைத்தளமான Myspace ஐ முந்தியது பேஸ்புக் நிறுவனம்.  அக்டோபர் 2010 இல் 'The Social Network' எனும் திரைப்படம் மார்க் சூர்கர்பேர்கின் சுயசரிதையை ஒப்புவித்து, எட்டு அஸ்கார் விருது களுக்கு பரிந்துரைக்கப்பட்டு அதில் மூன்றை வென்றது.

2011 ஜூன் மாதம், பேஸ்புக்கிற்கு போட்டியாக கூகுள் நிறுவனம் கூகுள் பிளஸை அறிமுகப்படுத்தியது.

2011 செப்டெம்பர் மாதம், பேஸ்புக் டைம்லைன் எனும் செயற்பாட்டை அறிமுகப்படுத்தி ஒருவரின் வாழ்க்கை வரலாற்றையே இதில் பதிவுறச்செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியது.

2013 ஜனவரி மாதம்  கிராஃப் எனும் செயற்திட்டத்தை அறிமுகம் செய்து, அதில் நண்பர்கள் பகிர்ந்து கொண்ட எதனையும் பேஸ்புக் தேடுபொறி மூலம் இலகுவில் கண்டுகொள்ளலாம் எனக் கூறியது.

2013 ஏப்ரல் மாதம் ஸ்மார்ட்ஃபோனுக்கு ஏற்றது போல் புதிய ஆண்டிராய்டு ஆப்ளிகேஷனை அறிமுகம் செய்தது. 2014 ஜனவரி 30ம் திகதி Paper எனும் புதிய ஆப்ளிகேஷனை அறிமுகம் செய்துள்ளது.  இதன் மூலம் உங்களது News Feed பகுதி, ஓர் பத்திரிகை போன்று புதிய வடிவத்துடன், புகைப்படங்கள், வீடியோக்களாக கலக்கவுள்ளது.

ஆனால் எவ்வளவு வேகமாக பேஸ்புக் வளர்ச்சி அடைந்து வந்ததோ, அவ்வளவு விரைவாக வீழ்ச்சி அடைந்துவிடும். இன்னமும் சில வருடங்களில் பேஸ்புக்கின் பயனாளர்கள் தொகை அதிகளவில் குறைவடையும். கடந்த ஒரு வருடத்திற்குள்ளேயே 3 மில்லியன் பயனாளர்களை பேஸ்புக் இழந்துவிட்டது. இது பேஸ்புக் மீதான ஒரு  வெறுப்பின், அல்லது அயர்ப்பின் வெளிப்பாடாக இருக்கலாம் என்கின்றனர் சமூகவலைத்தள நிபுணர்கள்.


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment