அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்கு மூளையாகச் செயற்பட்ட அல்கொய்தா இயக்கத் தலைவர் ஒசாமா பின்லேடன் அமெரிக்க இராணுவத்தால் பல வருடங்களாகத் தேடப்பட்டு 2011 மே 2 ஆம் திகதி பாகிஸ்தானில் வைத்து சுற்றி வளைத்துப் பிடிக்கப் படும் போது சுட்டுக் கொல்லப் பட்டதாகவும் அதன் பின்னர் 24 மணிநேரத்துக்குள் கடலில் புதைக்கப் பட்டதாகவுமே அமெரிக்கா உலகுக்குத் தெரிவித்திருந்தது.
இச்சம்பவம் நிகழ்ந்து 3 ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில், அமெரிக்கா பின்லேடனைச் சுட்டுக் கொல்லவில்லை என்றும் அவரைக் கடத்திச் சென்று விசாரணைக்காக இன்னமும் உயிரோடு தான் வைத்திருப்பதாகவும் கடலில் கொன்று புதைத்ததாகக் கூறியது அனைத்தும் பொய் எனவும் குவைத் பல்கலைக் கழகத்தின் அரசியல் விஞ்ஞானப் பிரிவின் முன்னால் பேராசிரியரான அப்துல்லா அல் நஃபேசி என்பவர் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவரின் அறிக்கை தொடர்பான தகவல்கள் சவுதி பத்திரிகைகளிலும் சில தொலைக்காட்சி சேவைகளிலும் கூட வெளியாகியுள்ளன.
இவரது அறிக்கையில் மிக விரிவாக இவ்வாறு கூறப்பட்டுள்ளது..'உலகின் முக்கிய வல்லரசான அமெரிக்கா 11 வருடங்களாக பில்லியன் டாலர்கள் வரை செலவழித்து மிகச் சிரமப் பட்டு கைது செய்த அல்கொய்தா தலைவனைக் கொண்டு அந்த இயக்கம் குறித்த மேலதிக தகவல்களைப் பெறுவதற்கு முயற்சிக்காமல் வெறுமனே அவனைச் சுட்டுக் கொல்வது என்பது சந்தேகத்துக்கு இடமான ஒன்று!' எனப்பட்டுள்ளது.
இதேவேளை ஒசாமா பின்லேடன் இன்னமும் உயிரோடு இருக்கலாம் என ஊகிக்கப் படுவதற்கு அவரைச் சுட்டுக் கொன்றதாகக் கூறிய அமெரிக்கா பின்லேடனின் இறந்த உடலின் புகைப் படங்களை மீடியாக்கள் கேட்டிருந்த போதும் வழங்க மறுத்து விட்டதும் காரணமாகக் கூறப்படுகின்றது.


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Post a Comment