நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்தர மோடி குறித்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மணி ஷங்கர் ஐயர், மோடி பிரதமராக முடியாது, வேண்டுமென்றால் காங்கிரஸ் கூட்டத்தில் டீ விற்க ஏற்பாடு செய்கிறோமென கூறியுள்ளார். மேலும், இத்தகைய கருத்து தெரிவித்ததற்கு தான் மன்னிப்பும் கேட்கபோவதில்லை எனவும் கூறி இருக்கிறார்
பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி தனது இளமை காலத்தில் டீ விற்றதாக தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தெரிவித்தார். இதனை காங்கிரஸ் தலைவர்கள் சிலர் கேலி செய்தனர்
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மணி ஷங்கர் ஐயர், மோடி குறித்து பேசிய போது,' 21 ஆம் நூற்றாண்டில் மோடி கண்டிப்பாக பிரதமராக முடியாது. டீ விற்க வேண்டுமானால் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் ஏற்பாடு செய்கிறேன்' என்றார்.
இது மோடியின் தனிப்பட்ட விஷயம் சார்ந்தது என கூறியதற்கு பதிலளித்த 72 வயதான மணி ஷங்கர் ஐயர், யார் முதலில் தனிப்பட்ட விஷயங்கள் பற்றி பேசியது? மோடி, ராகுல் காந்தியை இளவரசர் என அழைப்பது தனிப்பட்ட விஷயமில்லையா? என கூறிய அவர் தான் மோடியை டீ விற்க அழைத்ததற்காக மன்னிப்பு கேட்கபோவதில்லை எனவும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Tweet
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Post a Comment